நாடுதழுவிய ரீதியில் நாளை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பொது தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களும் தவறாது பங்களிப்பை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த சேவைகளும் நாளை முடங்கவுள்ளது. மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாது ஜனநாயகத்துக்கு எதிரான வழியில் அரசாங்கம் பயணிப்பதை கண்டித்தே இந்த பாரிய தொழிற்சங்க போராட்டம் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மலையக மக்களும் தவறாது தம்மால் முடித்த அழுத்தத்தை அரசாங்கத்துக்கு கொடுக்க முன்வர வேண்டும்.
அரசாங்கம் மக்களுக்கு விரோதமான போக்கை கடைபிடிப்பதால்தான் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐதேக ஆதரவளிக்கும் முடிவை அறிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.