அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் நுவரெலியா நகரிலும் முன்னெடுக்கப்பட்டது.

0
134

இதன் போது நுவரெலியா நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையிலும் மூடப்பட்டிருந்த நிலையில்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கந்தபளை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு இருந்தது.

இன்றைய தினம் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நுவரெலியா பழையகடை வீதியின் ஊடாக பேரணியாக சென்று மீண்டும் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நுவரெலியா பகுதியில் எந்தவித வாகனங்களும் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here