எதிர்கட்சி அரசியலை செய்து அரசாங்கத்தை அசெகரியப்படுத்தாது ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வுகாண இ.தொ.கா. நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் சிரேஸ்ட்ட உப தலைவருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார். இன்று (06) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து காருத்து தெரிவிக்கையில்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தரமான கல்வியினை வலியுறுத்தியும் சம்பள முறண்பாட்டினை நீக்கக்கோரியும் நடாளவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது இந்நிலையில் கடந்த வாரம் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸ்த்தர்களை சந்தித்து அவர்களின் போராட்டம் குறித்தும் சம்பள முறண்பாடு குறித்தும் தெளிவாக விளக்கமளித்தனர.
ஆகவே அவர்களின் கோரிக்கை நியாயமானது கால் நூற்றாண்டு பிரச்சினையினை தீர்க்க வேண்டும் ஆகவே தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சி என்ற வகையில் நாங்கள் பிரதமர் கல்வி அமைச்சர் உட்பட இதனுடன் தொடர்புடையவர்களிடம் பேசி இந்த பிரச்சினையினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார் இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் குரல் கொடுக்க அவர் தீர்மானித்துள்ளார்.
அரசாங்கம் இன்று பொருளாதார நெருக்கடி காரணமாக பின்னடைவுகளை சந்திருந்தாலும் இந்த பிரச்சினையினை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையிருப்பதால் நாங்கள் தொழிற்சங்கங்களுடன் இணைந்து குரல் கொடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.