அரசாங்கம், அரசாங்கத்தை விசாரணை செய்யும் நிலை உருவாகியுள்ளது!

0
59

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித்தின், 50 ஆவது ஆண்டு குருத்துவ பணி நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே, ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்

கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், மல்வத்து பீடத்தை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், பல தசாப்தங்களாக தம்மை அர்ப்பணித்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு, தம்மீதான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது, அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாடுபடுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கத்தினால், அரசாங்கத்திற்கு எதிராக விசாரணை செய்ய வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உரிய பொறிமுறையினூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here