அரசாங்கம் கடனை பெற்று இலவசமாக புத்தகம், சீருடை பெற்றுக்கொடுப்பது நாட்டிக்கு நற்பிரஜைகளை உருவாக்கவே.

0
156

அரசாங்கம் இன்று நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாட புத்தகங்களை விநியோகம் செய்து வருகிறது.தேசிய நிகழ்வுக்கு இணையாக இந்த நிகழ்வு இன்று (23) நடைபெறுகிறது.அரசாங்கம் கடன் பட்டாவது மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களையும் இலவச சீருடைகளையும் பெற்றுக்கொடுப்பது நாட்டிக்கு நல்ல பிரஜைகளை உருவாக்கவே எனவே மாணவர்கள் இந்த பாட புத்தகங்களை நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் பாதுகாத்து நல்ல பெறுபேறுகளை பெற்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் தேசிய நிகழ்வுக்கு இணையாக ஹட்டன் கல்வி வலயத்தில் ஆசிரியர் வள நிலையத்தில் இன்று (23) இடம்பெற்றது.
இதில் ஹட்டன் கல்வி வலயத்தில் ஹைலன்ஸ்,பொஸ்கோ,புனித கப்ரியல் மகளிர் கல்லூரி,ஸ்ரீ பாத சிங்கள மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சுமார் 50 மாணவர்களுக்கு இதன் போது உத்தியோக பூர்வமாக பாட புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்,கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் இனிப்பு பண்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து வலயக்கல்விப்பணிப்பாளர் கருத்து தெரிவி;க்கையில் எமது கல்வி வலயத்தில் சுமார் 50,000 மாணவர்கள் உள்ளனர் அதில் தமிழ் மொழி மூலம் 113 பாடசாலைகளிலும் சிங்கள மொழி மூலம் 37 பாடசாலைகளிலும்; 140 பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர.; இவர்கள் அனைவருக்கும் இன்று அதிபர்கள் ஊடாக புத்தகங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இந்த புத்தகங்களை பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் வலயத்திற்கு நல்ல பெறுபேறுகளை மாணவர்களாகிய நீங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் நீங்கள் நல்ல பெறுபேறுகளை பெற்றால் தான் அடுத்து உயர்தரத்திற்கோ,பல்கலைக் கழகத்திற்கோ சென்று புத்திஜீவிகளாகி இந்த நாட்டில் நல்ல தொழில்களை பெற்று நாட்டிக்கு சேவையாற்ற முடியுமென அவர் இதன் போது தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுமதி,மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் இணைப்பாளர்கள் வளவாளர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்;.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here