அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் நிதியை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்!

0
51

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சதவீதமாக அரச வருவாயில் 15% ஐக் கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனையிட்டாலும், இன்று அது 15.9% ஆக அதாவது 287 பில்லியன் ரூபா அரச வருவாயை ஈட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொழில்முனைவோர், தொழிற்றுறையினர், சேவைகள், நிர்மாணத்துறைகளை வலுப்படுத்த வேண்டியிருப்பதால், IMF விதித்த இலக்கை விட அதிகமாக ஈட்டப்பட்ட மேலதிக 0.9% அல்லது ரூ. 287 பில்லியனை மேற்கூறிய துறைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துங்கள். ஆரம்ப மீதி கூடிதலாக ஈட்டப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறும்போது, ​​அதற்காக ஆரவாரம் செய்பவர்களும் காணப்படுகின்றனர். இவ்வாறு ஆரவாரம் செய்வோருக்கு ஆரம்ப மீதி தொடர்பில் சரியான தெளிவு இல்லை. IMF இலக்குகளின்படி, ஆரம்ப மீதி 2.3 இல் பேணிச் செல்ல வேண்டும். இருந்த போதிலும் அது இப்போது 3.8 ஆக அதிகரித்து காணப்படுகின்றன. மேலதிகமாக ஈட்டிக் கொண்ட நிதியை நாட்டு மக்களுக்காக முதலீடு செய்யலாம், வரிச் சலுகைகளை வழங்கலாம், வீட்டுவசதிகள் போன்ற கனவை கூட நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் சேமித்து வைத்திருப்பதாகக் கூறும் மேலதிக நிதியை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். மேலதிகமாக ஈட்டிய நிதியை வைத்து திறைசேரியை நிரப்பி போதாது. 2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த விரைவான பொருளாதார வளர்ச்சி தேவையாக காணப்படுகின்றன. நிர்மாணத் துறையில் மூளைசாலிகள் வெளியேற்றம் மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் காணப்படுவதால், இதற்கு முறையான தேசியக் கொள்கையொன்று அமைந்து காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் ஆரம்பான கெதல்ல Art of Living 2025 கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

🟩 சகல பிரஜைகளினதும் வீட்டுக் கனவை நனவாக்க வேண்டும்.

தமக்கென சொந்த வீட்டை கொண்டிருப்பது ஒவ்வொரு குடும்பத்தினதும், பிரஜையினதும் விருப்பமும், கனவுமாக காணப்படுகின்றன. இந்த கனவை நனவாக்குவதற்கு தற்போதுள்ள கட்டமைப்பில் பல சிரமங்கள் காணப்படுகின்றன. தமக்கென வீட்டை கொண்டிருப்பது மூலதனச் சொத்தாக காணப்பட்டாலும், நிர்மாணத்துறை பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால், இளம் குடும்பங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் உட்பட பெரும்பாலான மக்கள் தமக்கென சொந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்காக விசேட நிதி ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பது அரசாங்கம், அரச கொள்கைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பொறுப்பாக அமைந்து காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 வீட்டுவசதி மற்றும் நிர்மாணத் துறைக்கு தேசிய வேலைத்திட்டமொன்று தேவையாகும்.

புதிய நிலைபேறான அபிவிருத்தி முறையில், காணி பரப்பளவு வரையறுக்கப்பட்டு அதற்குப் பற்றாக்குறையும் காணப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு நவீன, நிலையான வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். புதிய வீடமைப்பு முறைகளையும் புதிய மாதிரிகளையும் அறிமுகப்படுத்திக் கொடுக்க வேண்டும். பாரம்பரிய கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொள்ளாமல், புதிய முறைகள் மூலம், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு விசேட திட்டங்களை வகுத்தல், வீட்டு உரிமையாளருக்கான வரிச் சலுகைகள் மற்றும் இறக்குமதிகளின் செலவை நிர்வகித்தல், காப்புறுதி சேமிப்பு செலவினங்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்தல் போன்ற துறைகளில் புதிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் எமக்கு இருந்தால், எம்மால் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். வீட்டு வரைபடங்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தல் மற்றும் அனுமதிகளைப் பெறுவதில் காணப்படும் நடைமுறை தாமதம் காரணமாக, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். நாட்டில் நில பயன்பாட்டுத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பயன்படுத்தப்படாத அரச காணிகளைப் பயன்படுத்தி, வீட்டுவசதித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பெரும் பங்களிப்பைப் பெற்றுத் தரும், இலட்சக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு முக்கியமான துறையான நிர்மாணத் துறையை வலுப்படுத்துவது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என்பதால் இந்த கெதல்ல கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here