37ஆவது பொலிஸ் மா அதிபரின் நியமனம் குறித்து விவாதிக்க அரசியலமைப்பு சபை நாளை (12) கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பான கூட்டம் நாளை பிற்பகல் 1:30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ளது.




