புதிய அரசியல் கலாசாரத்திற்கு மூன்றாவது அமைப்பு தேவை என்பதனை இந்த புத்தகம் எடுத்து காட்டியுள்ளது.இது மிக மிக முக்கியமானது இந்த கூட்டத்திலே இதனை நான் மிகவும் வலியுறுத்தி சொல்வதும்.அதனை எழுத்தாளர் பெ.முத்துலிங்கம் எடுத்துக்காட்டியிருக்கிறார்;.
எங்களுக்கு இருப்பது எங்களை நாசமாக்கப்பட்ட அரசியல், அரசியல் சக்திகளால் நாசமாக்கப்பட்ட மக்கள்,அரசியல் கட்சிகளினால் நாசமாக்கப்பட்ட மக்கள்.அரசியலில் உங்கள் வாக்குகளை வாங்கி கொண்டு பாராளுமன்றம் சென்ற கெட்ட சக்தியினால் நாசமாக்கப்பட்ட மக்கள்.எல்லாம் ஏமாந்த நிலையில் இருக்கின்றோம்
இன்னும் எம்முடைய வெட்கத்தை காட்டுவதற்காக 200 ஆண்டுகள் 200 ஆண்டுகள் என்று பேசிக்கொண்டிருக்கின்றோம். என எழுத்தாளர் மு.சிவலிங்கம் தெரிவித்தார். மலையகம் நிலை மாற்றத்தை நோக்கி என்ற நூல் அறிமுக விழா தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் அடையாளம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 18 காலை 11 மணியளவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காலத்தில் மூன்றாவது அமைப்பைப் பற்றி முத்துலிங்கம் சொல்கிறார்.இதனை இளைய சமூகம் நினைக்க வேண்டும் நாம் எல்லாம் கடந்த சில தினங்களுக்கு முன் கொட்டும் மழையில் அனுரகுமார திசாநாயக்க ஹட்டனுக்கு வந்திருந்தார் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொட்டும் மழையில் காத்திருந்தனர். அது ஏன் என்றால் அமைப்பொன்றை இளைஞர்கள் தேடுகிறார்கள்.அது ஜெவிபியாக இருக்கலாம் வேறு எந்த சக்தியாகவும் இருக்கலாம் மூன்றாவது அமைப்பு தேவை.இது மிக மிக அவசரமாக தேவை.200 ஆண்டுகள் என்பது சாதாரண விடயமல்ல.இன்னும் 47 நாட்களில் 201 ஒன்றையும் நாம் கொண்டாடத்தான் போகிறோம்.நாம் இந்த நாட்டிலே வருடங்களை எண்ணிக்கொண்டு வாழும் அவமானப்பட்ட ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு எந்த இனத்திற்கும் கணக்கு கிடையாது வருடங்கள் கிடையாது நாங்கள் மட்டும் தான் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறான நிலையில் மாகாண சபை வந்த பின் எம்முள் ஒரு தேசிய மனோ நிலை ஏற்பட்டது என்பதனை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.நிச்சயமாக எங்களது தேசிய மனோநிலையினை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எமது தேசிய இருப்பு என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த நாட்டில் எமக்கு தேசிய இருப்பே கிடையாது கல்வி பற்றி பேச முடியாது,கலாச்சாரத்தை பேச முடியாது இலக்கியத்தை பேச முடியாது அதெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை.முதலில் நான் நிற்க வேண்டிய இடம் தான் தேசிய இருப்பு ஆனால் 200 ஆண்டுகள் ஆகியும் எமக்கு தேசிய இருப்பே கிடையாது தேசிய இருப்பை பற்றி பிறந்த முதலாவது சிந்தனை தான் 1987 ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபை.இவ்வாறான நிலையில் காலத்தை விணாக்கிய மக்கள் தங்களுடைய துக்கத்தை தெரிவிப்பது தான் மலையகம் 200 என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்