மலையக மக்கள் தொடர்பாக தலைவர் திகாம்பரம் அரசியல் ரீதியாக மேற்கொள்ளும் துணிச்சலான, தீர்க்கதரிசனமான முடிவுகள் சமூகத்துக்கு விமோசனத்தை ஏற்படுத்தும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் அட்டன் பணிமனையில் இடம்பெற்ற உத்தியோகத்தர்கள் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டுக்குத் தேவையான “டொலர்களை” கொண்டு வரும் கடின உழைப்பாளர்களாக தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். எனினும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பள உயர்வை வழங்க கம்பனிகள் தயக்கம் காட்டி வருகின்றன. தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலும், நீதிமன்றத் தீர்ப்பும் வந்தும் கூட கம்பனிகள் அவற்றை உதாசீனம் செய்து வருகின்றன.
இன்றைய நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில் ஒரு நாளைக்கு 3000 ரூபா வேதனம் கிடைத்தாலும் சமாளிக்க முடியாத அளவுக்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளன. மிகவும் இக்கட்டான நிலையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டிய நிலையில் அவர்களின் சம்பளத்தில் மாதாந்தம் கழித்துக் கொள்ளும் முற்பணத்தை வழங்குவதிலும் தோட்ட நிர்வாகங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இருந்தும் 15 ஆயிரம் ரூபா பண்டிகை முற்பணம் வழங்க வேண்டும் என எமது தலைவர் திகா விடுத்த வேண்டுகோளை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அவரது தலைமையிலான அரசாங்கத்தில் எமது தலைவர் திகாம்பரம் அமைச்சுப் பதவியை ஏற்காமல் மலையக மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் என்று சிலர் விமர்சனம் செய்து வருகின்றார்கள். அதைப் பற்றி நாம் கவலை கொள்ளவோ, அலட்டிக் கொள்ளவோ வேண்டிய அவசியம் கிடையாது.
அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதை விட சாதாரண உறுப்பினராக இருபது எவ்வளவோ மேலானது என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். வெறுமனே ஆடம்பரத்துக்காகவும் பகட்டுக்காகவும், வாகனங்களில் பவனி வருவதால் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாது. அத்தகைய வீண் ஆடம்பரத்தை திகாம்பரம் விரும்பவில்லை. எனவேதான் அரசாங்கம் அழைப்பு விடுத்தும் அமைச்சுப் பதவியை துச்சமென மதித்து ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
மலையக மக்கள் தொடர்பாக அவர்களின் எதிர்கால பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் மிகவும் தோட்டத் நலன் ஏற்றுக் கொண்டுள்ளது. கருதி தீர்க்க தரிசனமான முடிவுகளை துணிச்சலோடு எடுக்கின்ற சாணக்கியம் அவரிடம் உள்ளது. மக்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்துள்ள ஓரே தலைவர் திகாம்பரம் என்பதால் அரசியல் சூழ்நிலைகளை அவதானித்துக் கொண்டிருக்கின்றார். பொருளாதார சீர்குலைவுக்கு ராஜபக்ஸக்கள் தான் காரணம் என்பதை முழுநாடும் உணர்ந்துள்ளது, அதில் தோட்டத் தொழிலாளர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். விரைவில் மலரும் மக்கள் ஆட்சியில் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்போம் என்றார்.