இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றன
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் இருந்து பவனியாக வருகைத்தந்து பிரதான பஸ் தரிப்பிடம் முன் இப்போராட்டமானது இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு , விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை பொது மக்கள் எதிர் நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
டி.சந்ரு