அரசுடன் இருப்பதா? வெளியேறுவதா? முடிவு செய்யவுள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

0
159

அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது சம்பந்தமாக முடிவு செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வேண்டும் என அதன் தலைவரான ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இதற்கு முன்னர் அரசாங்கத்தின் பிரதானிகளுக்கு அறிவித்து இருந்தார் என கூறப்படுகிறது.

நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பேருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலைமையில், அரசாங்கத்துக்கு மிகப் பெரிய ஆதரவை பெற்றுக்கொடுத்த தமது கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படாமை தொடர்பில் அவர் எதிர்ப்பை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை. இதனடிப்படையில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க அந்த கட்சி தயாராகி வருவதாக பேசப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here