எதிர்வரும் ஆண்டிற்கான விசேட முற்பணத்தை அரச அதிகாரிகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்பணமாக 4,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதுடன், ஜனவரி 1ஆம் திகதி முதல் பிப்ரவரி 29ஆம் திகதிக்குள் அவையனைத்தும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,ஒரு சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம், இந்த முன்பணத் தொகையை 2024ஆம் ஆண்டிற்குள் வசூலித்து முடிக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறுகிறது.
திறைசேரியின் உடன்படிக்கையின் பேரில், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.