அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அநுர வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

0
25

தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கேகாலையில் (Kegalle) இன்று (08) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பின் அத்தகைய தரப்பினருக்கு அரசியல் தலையீடுகள் இன்றி குறுகிய காலத்திற்கு சில கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். ஜனவரி மாதம் புதிய பாடசாலை தவணை நடைமுறைக்கு வருகிறது.”டிசம்பரில் பாடசாலை தவணை முடிவடைந்தாலும், அடுத்த புதிய பாடசாலை தவணை ஜனவரி இறுதியில் தொடங்கும் என்பதை நாங்கள் அறிவோம்.இந்த ஆண்டு ஜனவரியில் பழைய தவணை முடிவடைகிறது. புதிய தவணை ஜனவரி இறுதியில் தொடங்குகிறது.

அந்த புதிய பாடசாலை தவணையில், மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது, ​​புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை சரியாக வாங்க முடியாத அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.அடுத்த படியாக அஸ்வெசும, அதில் உள்ள பெயர்களை மாற்ற மாட்டோம். அஸ்வெசும கிடைக்காதவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அரசியல் தலையீடுகள் இன்றி நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும்.

ஏற்கனவே இது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் சில சலுகைகளைப் பெற வேண்டுமாயின் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான நியாயமான காரணங்களை முன்வையுங்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here