அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு – அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

0
11

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு (Sri Lanka Government Officers’ Trade Union Association (SLGOTUA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்க அதிகாரிகள் தொழிற்சங்க சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி.பஸ்நாயக்க ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா முற்பணமாக வழங்கப்படுகின்றது.எனினும் தற்போதைய பொருளாதார சூழலில் இதனை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக உயர்த்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இன்று 10,000 ரூபாயை வைத்து எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இன்றைய சூழலில் குறைந்தது 40,000 ரூபாயாவது பெற வேண்டும்,

தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here