அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் ! தீர்வு இல்லையேல் முன்னறிவித்தலின்றி போராட்டம்

0
190

அரச ஊழியர்களுக்கு 18,000 ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும். இருவார காலத்திற்குள் தீர்வு இல்லாவிடின் முன்னறிவித்தலின்றிய வகையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரசாங்க உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

18,000 ஆயிரம் சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக கொடுப்பனவு ஆகியவற்றை வழங்காவிடின் முன்னவித்தலின்றிய வகையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாத காரணத்தினால் 1.5 மில்லியன் அரச சேவையாளர்களும், அவர்களை சார்ந்துள்ள 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 4 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் ஒரு மாத செலவு 58,000 ஆயிரமாக காணப்படுகிறது. மறுபுறம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆகவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து எதிர்வரும் இரு வாரத்திற்குள் கவனம் செலுத்தாவிடின் எவ்விதமான முன்னறிவித்தலும் இல்லாத வகையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம்..com/img/a/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here