அரச சேவையை நவீனமயமாக்க நிதி ஒதுக்கீடு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

0
5

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக சிதைந்த அரச கட்டமைப்பை மீட்டெடுக்கவும், நவீன அரச சேவையை உருவாக்கவும் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச சேவையை நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41ஆவது வருடாந்த மாநாட்டில், அலரி மாளிகையில் நேற்று (05) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது, ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் தலா 11,000 கோடி ரூபா ஒதுக்கப்படும் எனவும், சமூக விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகளை உருவாக்க வேண்டும் எனவும் அரச சேவையை கவர்ச்சிகரமாகவும், மக்கள் மையமாகவும் மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இம்மாநாட்டில், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் மூலம் அரச சேவையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான திட்டங்களும் விவாதிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here