அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

0
7

அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 2,000 கப் ரக வானங்களை  இறக்குமதி செய்ய பொது நிருவாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சில அரச துறைகளுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், இதன் விளைவாக அதிகாரிகள், குறிப்பாக களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி  சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதேவேளை வாகனங்களை வழங்குவதில் பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here