அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் 1000 ரூபா சம்பள உயர்வு குறித்து நிலவிய பிரச்சினைக்கு தீர்வு! – இ.தொ.கா நடவடிக்கை –

0
181
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ கண்டி, மாத்தளை மாவட்டங்களில் இயங்கும் 16 தோட்டங்களில் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்காக இ.தொ.காவின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் குறித்த நிறுவனத்தின் பிரதானிகளுடன் முன்னெடுத்துவந்த பேச்சுவார்தை வெற்றியளித்துள்ளதுடன், கடந்த மாதத்தில் இணைக்கப்பட வேண்டிய நிலுவைப் பணம் இன்றும் குறித்த தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கம்பனிகளில் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவில்லை தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் செந்தில் தொண்டமான் உடனடியாக அரசின் கீழ் இயங்கும் மூன்று கம்பனிகளின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தார்.
கடந்த சில தினங்களாக அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் பிரதானிகளுடன்
முன்னெடுக்கப்பட்டுவந்த பேச்சுவார்த்தையின் பிரகாரம் இந்நிறுவனத்துக்கு சொந்தமான தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் வழங்கப்பட வேண்டிய நிலுவை பணமும் இன்று தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

– இ.தொ.கா நடவடிக்கை –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here