அரசாங்கத்தால் புரட்டொப்ட் பகுதிக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட அரச பேரூந்து இதுவரை குறித்த பகுதியில் நடைமுறைப்படுத்தாமையினால் அரச பேரூந்து சேவை வேண்டுமென புரட்டொப்ட், ரஸ்புரூக்,பூச்சிகொடை, மேரியல், அயரி,மேமலை கட்டுக்குத்துல, காச்சாமலை, சமகிபுர,டெல்ட்டா போன்ற தோட்டப்பகுதிகளில் தொழிலாளர் பணி நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பாரிய கண்டன ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் ரஸ்புக் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக புஸல்லாவ கெமுனுபுர பகுதியில் கண்டி நுவரெலியா பிரதான வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு மறுபடி புஸல்லாவ அரச பேருந்து நிலையம் வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்திற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் புஸல்லாவ பகுதியில் இடம்பெறுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர். இப் போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள், இளைஞர் யுவதிகள், அரச தனியார் துறையினர் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த், கிஷாந்தன்