அரச மாளிகையிலிருந்து மகிந்த விரைவில் வெளியேற்றம்?

0
23
User comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையிலிருந்து வெகுவிரைவில் கட்டாயம் வெளியேற நேரிடும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்துக்குரிய தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனும் 20 நாட்கள்வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். கடைசியில் நீதிமன்றத்தில் சரணடைய நேரிட்டது.

மஹிந்த ராஜபக்சவுக்கு இந்நாடு மீது, மக்கள் மீது அக்கறை இருந்தால் மக்கள் பணத்தை வீண்விரயம் செய்யாமல் வெளியேற வேண்டும். எது எப்படி இருந்தாலும் அரச மாளிகையில் இருந்து கட்டாயம் செல்ல நேரிடும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here