அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை முடிவு!

0
203

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும் அரிசி இறக்குமதிக்கு வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பால் மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து தொடர்பில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here