அருண் மாணிக்கவாசகத்தின் மறைவுக்கு எஸ்.ஆனந்தகுமார் இரங்கல்!

0
150

அருண் மாணிக்கவாசத்தின் மறைவுக்கு எஸ்.ஆனந்தகுமார் இரங்கல்!

வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்துக் கல்லூரியின் ஸ்தாபரகர் அருண் மாணிக்கவாசத்தின் மறைவு வத்தளை தமிழ் மக்களுக்கு பெரும் இழப்பாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மாணிக்கவாசகம் ஐயாவின் மறைவு என்னுள் ஆழ்ந்த சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக அவருடன் நட்பை பேணிவருபவன் நான். ஏழைகளுக்கு உதவுவதைப் பற்றியே அதிகம் சிந்திப்பவர்.

வத்தளை வாழ் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி அங்கு பாடசாலையொன்றை அமைப்பதற்காக தனது சொந்த காணியை நன்கொடையாக வழங்கியவர். அந்தக்காணியில்தான் வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்துக் கல்லூரி அமைக்கப்பட்டது.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here