ஹட்டன் பண்டாராநாயக்க நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 44 வருட மாசிமக திருவிழாவினை முன்னிட்டு பால்குட பவனி இன்று (16) பௌர்ணமி தினத்தன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த பால்குட பவனி ஹட்டன் இராம சஞ்ஜீவ, ஆஞ்நேய ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தினை வந்தடைந்தன.
இந்த பால்குட பவனியில் கலை கலாசார நிகழ்வுகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க பக்த அடியார்கள் அரோகரா கோசமிட்டவாறு மிகவும் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். இப்பால்குட பவனி காலை 9.00 மணிக்கு விநாயகர் வழிபாடு புன்னியவாஜனம், யாகபூஜை, சங்குபூஜை, திரவியபூஜை, அஷ்டோத்திர சத 109 சங்காபிசேகம் ஆகியன இடம்பெற்று ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் ஏனைய விக்கிரங்களுக்கும் பாலாபிசேகம் இடம்பெற்றன.
நாளை சங்காபிசேகம் குழுர்த்தி பொங்கலும் நாளை மறுதினம் அம்பாளுக்கு மஞ்சள் நன் நீராட்டு விழா இடம்பெற்று எதிர்வரும் 18 ம் திகதி நவதுர்க்கா சண்டி பூஜையுடன் இந்த விழா இனிதே நிறைவு பெறும். என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
ஆலய பிரதம குரு கிரியாமணி பிரம்ம ஸ்ரீ சக்தி உபாசகர்,பாலகுமார் சர்மா தலைமையில் இடம்பெற்ற இந்த உற்சவத்தில் சிவாச்சாரியார்கள்,குருக்கள் ஆகியோர் பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்தனர்.
மலைவாஞ்ஞன்