நாட்டில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில் பொருத்தமற்ற அளவு கன உலோகங்கள் உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சரும வெண்மையாக்கல் பொருட்களில் இப்பிரச்சினை அதிகம் என பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைன் விற்பனையைத் தடுக்க கண்காணிப்பு, தரசோதனை, சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.