அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி இயங்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் இன்று (8) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு அவிசாவளையில் தனியார் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹோமாகம பேருந்து டிப்போவின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேருந்துகளை இயக்க பாதுகாப்பு வழங்குமாறு கோரியும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.