அவுஸ்ரேலியாவை உத்வேகத்துடன் எதிர்கொள்ள காத்திருக்கிறோம்; புதிய தலைவர் குசல் மெண்டிஸ் நம்பிக்கை

0
170

அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் இன்று லக்னோ மைதானத்தில் மோத உள்ளன. அவுஸ்திரேலியாவை விட இலங்கை முன்னிலை பெற்றுள்ளதாக புதிய அணித்தலைவர் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் இன்று லக்னோ மைதானத்தில் மோத உள்ளன.இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிகவும் தீர்க்கமான போட்டியாக உள்ளது. காரணம், இரண்டு அணிகளும் இதற்கு முன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன.

காயமடைந்துள்ள அணித் தலைவர் தசுன் சானக மற்றும் பந்துவீச்சாளர் மதீச பத்திரன ஆகியோர் எதிர்வரும் சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அணியை வழிநடத்தும் பொறுப்பு குசல் மெண்டிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புதிய தலைவர் குசல் மெண்டிஸ்,அஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது.

அவுஸ்திரேலியாவை விட இலங்கை சிறந்த நிலையில் உள்ளது.நாங்கள் இரண்டு ஆட்டங்களில் தோற்றுவிட்டோம். ஆனால் அந்த தோல்விகளை பார்க்கும்போது, அஸ்திரேலியாவை விட நாங்கள் சிறப்பாகச் போட்டிகளில் செயல்பட்டுள்ளோம்.

அவுஸ்திரேலியாவின் பிரச்சினை துடுப்பாட்டமாக இருந்தாலும், இலங்கையில் பந்துவீச்சு சற்று பிரச்சினையாக உள்ளது.ஆனால் ஒவ்வொரு பந்துவீச்சாளலும் இந்திய ஆடுகளங்களில் சற்று கடினமான சூழலையே எதிர்கொண்டுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்“ என்றார்.இலங்கையின் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் சிறந்த பெறுபேறுகளை கடந்தகாலங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 158 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய இரண்டு பயிற்சி ஆட்டங்களில் 76 மற்றும் 122 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், முந்தைய இரண்டு ஆட்டங்களில் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

“நான் பேட்டிங் செய்யும் முறையை மாற்ற விரும்பவில்லை. உலகக்கிண்ணத்துக்கு வருவதற்கு முன்பு, நான் இதுபோன்ற அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய பிறகு ஆடுகளங்கள் நன்றாக இருப்பதால் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை புரிந்துகொண்டேன்.

எனது அணுகுமுறையில் நான் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரங்கள் இருக்கும், ஏனெனில் பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களுடன் என்னை கடுமையாக தாக்க முற்படுகின்றனர்.நான் தலைவராக இருந்தாலும், நான் துடுப்பாட்டம் செய்யும் முறையை மாற்ற மாட்டேன்“ என்றும் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here