அஸ்வெசும கொடுப்பனவு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0
15

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு தொடர்பாக முன்னாள் அரசாங்கம் கடைப்பிடித்த வினைத்திறன் இல்லாத நடைமுறையையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடித்து வருவதாகக் கிராம சேவகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அந்தச் சங்கத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவின்போது, பிழையில்லாத பொறிமுறை ஒன்றைப் பின்பற்றுமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு சம்பந்தமான செயற்பாடுகளிலிருந்து கடந்த மே மாதம் 7ம் திகதிக்குப் பின்னர் கிராம சேவகர்கள் விலகிக் கொண்ட நிலையில் அந்தப் பணிகள் தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைப் பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைக் கையளிப்பதற்கும், நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அதிகளவான மக்கள் நுவரெலியா (Nuwaraeliya) பிரதேச சபை செயலகத்திற்கு முன்பாக கூடியிருந்தனர்.

இதனிடையே, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அல்லது தனிநபர் தங்களது குறைகளை அறிவிப்பதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here