அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!

0
74

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது.அத்துடன் இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை 3.4 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றிருந்தது.குறித்த விண்ணப்பங்களில் சுமார் 1.8 மில்லியன் பேர் அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

எனினும், நலன்புரி நன்மைகள் சபை தற்போது 1.72 மில்லியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here