அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்க இணக்கம்!

0
133

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் அதிபர் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அஸ்வெசும திட்டத்தை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கு கிராம மட்டத்தில் அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதற்கான ஆதரவை வழங்குவதற்கு இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிபர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டது என இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here