அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெற்றுக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொட்டும் மழையினையும்; பொருட்படுத்தாது நீண்;ட வரிசையில் பல மணித்தியாலங்கள் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று 20 காலை முதல் காத்திருந்தனர்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெற்றுக்கொள்ளவுள்ள முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் வங்கி கணக்கினை ஆரம்பிப்பதற்கு கடிதங்களை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு காத்திருக்கின்றனர்.
சுமார் 3000;திற்கு மேற்பட்ட பயனாளிகள் இவ்வாறு கூடியதன் காரணமாக அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது இதனால் குறித்த அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரிசையினை நெறிப்படுத்துவதற்காக திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.
குறித்த நலன்புரி நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிய போதிலும் இந்த ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் வரவேண்டிய நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனை அறியாமல் பலரும் வருகை தந்ததன் காரணமாக இவ்வாறு நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கமைய அம்பகமுவ செயலகத்திற்கு உட்பட்ட ஹட்டன் தெற்கு ரூவன்புர ஹட்டன் மேற்கு பிரிவுகளை சேர்ந்தவர்கள் 20 ம் திகதியும், நோர்வூட் செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை சேர்ந்த மொக்கா பொகவான பகுதியை சேர்ந்தவர்கள் 20 ம் திகதியும், வனராஜா ஹட்டன் வடக்கு, டிக்கோயா தெற்கு, ஸ்ட்ரப்பி, ஓல்டன் பகுதியை சேர்ந்தவர்கள் 21ம் திகதியும், வெளிஓயா, லெதன்டி, பிரவுன்சிக், பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் 24ம் திகதியும் வெஞ்சர், பன்மூர,; நிவ்வெலிகம, இன்ஜஸ்ரி, டிலரி மஸ்கெலியா ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் 25ம் திகதியும், டிக்கோயா, ஹட்டன் கிழக்கு, ஹட்டன் வடக்கு, கெர்கஸ்வோல்ட், மறே பகுதியை சேர்ந்தவர்கள் 26 ம் திகதியும், மவுசாக்கலை, ரொசல்ல, செனன்,; சீத்தாகங்குல, கவரவில மாநெலு பகுதியை சேர்ந்தவர்கள் 27ம் திகதியும், நோர்வூட், என்பீல்ட், கொட்டியாகல, லொய்னொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் 28 ம் திகதியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை எவ்வித நிரந்தர தொழிலும் இன்றி நாட்கூலிக்கு ஈடுபடும் பல குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களில் பல குடும்பங்களுக்கு தொழில் இருந்தும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நகர் புற மற்றும் கொலனி பகுதிகளில் வசிக்கும் பல குடும்பங்கள் இந்த அஸ்வெசும நலன்புரி நிவாரணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பலரும்| முணுமுணுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்