அஸ்வெசும 2ம் கட்ட விண்ணப்பங்கள் இன்று முதல் கோரல்

0
137

அஸ்வசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.

அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவிக்கையில்;

“.. விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், பிரதேச செயலக அலுவலகங்களில் உள்ள விசேட பிரிவுகளும் ஊடாகவும் வழங்கலாம். ஒரு மாதத்திற்குள் விண்ணப்பங்கள் கோரலை எதிர்பார்க்கிறோம். முதல் சுற்றில் 20 லட்சம் உறுதி செய்யப்பட்டது. இது இரண்டாவது சுற்றில் 24 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தத்தில், இந்த ஆண்டு நலத்திட்டங்களுக்கு அரசாங்கம் 205 கோடி ரூபாய் செலவழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here