அஸ்வெசும 2 ஆம் கட்ட நிவாரணம் தொடர்பில் வெளியான தகவல்

0
155

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்துக்காக விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரிகளால் ஆராயப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி தீர்வு காண்பதற்காக இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட வாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here