‘மதராஸி’ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படம் வார இறுதிநாட்களில் நல்ல வசூல் செய்தாலும், வார நாட்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் செய்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி.
ரஜினியின் பாராட்டு தொடர்பாக சிவகார்த்திகேயன், “’மதராஸி’ படத்துக்காக என் தலைவரிடம் இருந்து பாராட்டுகளை இப்போது தான் பெற்றேன்.
“மை காட்.. அருமை! என்னவொரு நடிப்பு, என்னவொரு ஆக்ஷன், சூப்பர் சூப்பர் எஸ்.கே! எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” எனது தலைவரின் வாழ்த்து. அவரது வழக்கமான முத்திரை சிரிப்புடன்! லவ் யூ தலைவா” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ‘மதராஸி’ திரைப்படம் ஒட்டுமொத்த வசூலில் பங்குத்தொகையாக ரூ.25 கோடிக்குள் தான் வசூல் செய்யும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இது முந்தைய சிவகார்த்திகேயன் படத்துக்கு குறைவு தான் என்றாலும், வார இறுதிநாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.