ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய துபாய்க்கு செல்கிறது!

0
22

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இத்தொடர் 20 ஓவர் போட்டி முறையில் நடக்கிறது.

இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய அணிகள் உள்ளன.

இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் 10-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதுகிது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி 4-ந்தேதி துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது. இதற்கு முன்பு வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி புறப்பட்டு செல்வார்கள்.

ஆனால் இந்த முறை சில வீரர்கள் மட்டும் துபாய்க்கு புறப்படுவார்கள். மற்ற வீரர்கள் அவர்கள் இடங்களில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு வருவார்கள். வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அனைத்து வீரர்களும் 4-ந்தேதி மாலைக்குள் துபாய்க்கு வருவார்கள். முதல் வலைப்பயிற்சி 5-ந் தேதி ஐ.சி.சி அகாடமியில் நடைபெறும். பயண வசதியைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் அந்தந்த நகரங்களில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிலர் மும்பையில் இருந்து பயணம் செய்வார்கள்.

மற்றவர்களை மும்பைக்கு அழைத்து வந்து பின்னர் துபாய்க்கு செல்ல சொல்வது அர்த்தமற்றது. துபாய் என்பது மற்ற சர்வதேச விமானங்களுடன் ஒப்பிடும்போது ஒரு குறுகிய கால பயணமாகும். எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here