ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% உயர்வு

0
5

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ (South Pars) எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய விலையானது 4% ஆல் அதிகரித்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 112 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது. அதேவேளை, அமெரிக்க சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை 3% ஆல் அதிகரித்துள்ளதுடன், ஒரு பேரல் 99.27 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி காரணமாக இன்று (19) காலை ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தைகள் பின்வருமாறு வீழ்ச்சியடைந்துள்ளன:

தென் கொரியா (Kospi): 3% வீழ்ச்சி.

ஜப்பான் (Nikkei 225): 2.8% வீழ்ச்சி.

அவுஸ்திரேலியா (ASX 200): 1.6% வீழ்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here