ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்

0
160

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு தங்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் பழையபடி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு உபரி ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here