ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

0
165

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொவிட் – 19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (14.07.2021) ஆரம்பமானது. தோட்ட மற்றும் நகர் புற பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

சீன தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இன்று முதல் ஆசிரியர்களுக்கு ஏற்றப்படுகின்றது.

பாடசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் ஏனைய சில நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

41 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 980 ஆசிரியர்களுக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணிகள் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்னும் 10 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என கல்வி அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here