ஆசிரியர் மீது தலைக்கவச தாக்குதல்—ஓட்டமாவடியில் சம்பவம் !

0
93

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது நேற்று புதன்கிழமை (20) தலைக் கவசத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்து வைக்க முற்பட்ட ஆசிரியர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அவரது தந்தை உள்ளிட்ட குழுவினர் இரவு நேர கற்பித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் மீது தலைக் கவசத்தால் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் தலைப் பகுதியில் பலத்த காயமடைந்த ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்தர வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆசிரியரை தாக்கிய குழுவினர் தலைமறைவாகியுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட ஏனைய நபர்களை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here