ஆசிரியர் விடுதலை முன்னணியின் அங்கத்;தவர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் அவர்களின் அங்கத்தவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இதற்கமைய கடந்த 2018 தொடக்கம் 2022 வரை க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்று தற்போது உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்குஇந்த புலமை பரிசில் வழங்கப்படவுள்ளது.
குறித்த புலமை பரிசில் திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள் டிசம்பர் 20 ம் திகதி முன்னர் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தபால் உரையின் மேல் முளையில் ஆசிரியர் விடுதலை முன்னணி அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் என குறிப்பிட்டு செயலாளர் நாயகம் தபால் பெட்டி இலக்கம் 10 நுவரெலியா என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரிப்பட்டுள்ளது.
அங்கத்தவர்கள் தாம் கடமை புரியும் பாடசாலை மற்றும் அங்கத்துவ இலக்கம் ஆகியனவும் குறிப்பிடப்பட வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் 1988 1990 ஆகிய காலப்பகுதியில் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்களும் கௌரவிக்கப்படவுள்ளதனால் அவர்களுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
மலைவாஞ்ஞன்