ஆசிரியை அணிந்திருந்த தங்கச்சங்கிலியை, பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போது அறுத்துக் கொண்டு ஓடிய திருடன் குழப்பத்துடன் வழிமாறி, பொரளை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பொலிஸ் நிலையத்தை நோக்கி குறித்த நபர் ஓடி வருவதை அவதானித்த பொலிஸ் அதிகாரியொருவர், சந்தேகமுற்று அந்த நபரை பிடித்தபோது அவரது கையில் தங்கச் சங்கிலி இருந்துள்ளது.உடனடியாக விடயத்தை உணர்ந்துகொண்ட பொலிஸ் அதிகாரி, சந்தேக நபரை பிடித்து விசாரித்த போது அவர் போதை வஸ்துக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் தங்கச் சங்கிலியை பறிகொடுத்த ஆசிரியையும் பொரளை பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்துள்ளார்.