சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த மத்துகம நெபட பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான இராமசந்திரன் தர்ஷனி புதன்கிழமை (22) இலங்கை வந்தடைந்தார்.
சவூதி அரேபியாவில் அவர் பணியாற்றிய வீட்டில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சவூதி அரேபியாவிலிருந்து குவைட் வழியாக இலங்கை வந்தடைந்தார்.
பல்வேறு இன்னல்களை அனுபவித்த நிலையிலேயே தான் நாட்டை வந்தடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
“என்னை சலவை இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்று தாக்கினார்கள். கீழே தள்ளி என்னை தாக்கினார்கள். இரண்டு ஆணிகள் மற்றும் இரும்பு துண்டொன்றை கையில் கொடுத்து உட்கொள்ளுமாறு கூறினார்கள். இல்லையென்றால், தங்க நகைகளை திருடியதாக தெரிவித்து, பொலிஸில் பிடித்து கொடுப்பதாக கூறினார்கள். நான் ஆணிகளை உட்கொண்டேன். ஒரு ஆணி தொண்டையில் சிக்கியது. எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.” என தெரிவித்துள்ளார்.