ஆந்திராவில் ரூ.13,429 கோடி திட்டம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல்

0
15

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் வந்தடைகிறார். அங்கு அவர் ரூ.13,429 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் முடிவடைந்த சில திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். கர்னூலில் ரூ.2,856 கோடி செலவில் மின் உற்பத்தி ஆலை, கர்னூல் மாவட்டம், ஓர்வகள்ளு பகுதியில் ரூ.2,786 கோடி செலவில் தொழிற்சாலை மையம், கடப்பா பொப்பர்த்தியில் ரூ.2,136 கோடி செலவில் தொழிற்சாலை மையம், கொத்தவசா – விஜயநகரம் இடையே ரூ.493 கோடி செலவில் 4-வது ரயில்வே லைன், பெந்துர்ட்தி-சிம்மாசலம் வடக்கு ரயில் நிலையம் இடையே ரூ.184 கோடி செலவில் கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பாலம், சப்பவரம்-ஷீலா நகர் இடையே 13 கி.மீ தூரத்திற்கு ரூ.964 கோடி செலவில் கட்டப்பட்ட உள்ள 6 வழி பசுமை நெடுஞ்சாலை உள்ளிட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here