ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

0
180

ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பில், கணக்காய்வாளர் திணைக்களம் முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

இதன்படி, நாட்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பித்துக் கொள்ளாமல் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி,“நாட்டில் பதிவு செய்யப்படாத 18,516 ஆயுர்வேத வைத்தியர்கள் இருக்கின்றனர்.ஆயுர்வேத வைத்தியர்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை தமது பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

எனினும் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 26,650 பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களில் 3,827 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், சரியான தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை.இதன் காரணமாக உயிரிழந்த வைத்தியர்களின் பதிவுச் சான்றிதழ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here