கொவிட் தோற்று பரவல் காரணமாக மூடப்பட்ட அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் இன்று (25) திகதி மீண்டும் திறக்கப்பட்டன. தோட்டப்புற பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டிருந்தன.
நாட்டிலுள்ள பாடசாலைகள் கடந்த ஒரு வருடமும் ஆறுமாத்திற்கு மேலாக மூடப்பட்டதனை தொடர்ந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகின இந்நிலையில் ஆசிரியர்கள் ஒன்லைன் கல்வியினை தொடர்ந்ததனை தொடர்ந்து ஒரு சில மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக குறித்த கல்வி நடவடிக்கைகளும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன.
இந்நிலையில் கல்வி அமைச்சு கடந்த 21 ம் திகதி 200 இற்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பாடசாலைகள் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தொழிற்சங்கள் போராட்டம் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று (25) ஆசிரியர்கள் மாணவர்கள் வருகை வழமைப் போன்று காணப்பட்டதனால் கற்றல் கற்பித்தல் செயப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
பாடசாலைகளில் இன்று கொரோனா தொற்று பரவல் தொடர்பான விளிப்புணர்வுகளும் அதில் பாதுகாப்பு பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்களால் விளக்கம் அளிக்கப்பட்டதனை தொடர்ந்து மாணவர்கள் உள வளர்ச்சி செயப்பாடுகளுடன் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் ஆர்வத்துடன் கற்றல் பித்தல் செயப்பாடுகளில் ஈடுபடுவதனை காணக்கூடியதாக இருந்தன.
ஹட்டன் கல்வி வலயத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி 134 பாடசாலைகள் இன்று கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டிருந்தன தோட்டப்புற பாடசாலைகள் உட்பட நகர பாடசாலைகளையும் கடந்த இரண்டு தினங்களாக துப்புறவு செய்யப்பட்டு இன்று ஆரம்பமாகின.பெரும்பாலான பெற்றோர்கள் இன்று தங்களது பிள்ளைகளை கல்வி நடவடிக்கைகளுக்கு பாடசாலையில் கொண்டு வந்து விடுவதனை காணக்கூடியதாக இருந்தன.
இது குறித்து பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்….
நீண்ட காலமாக பாடசாலை இல்லாது போனதன் காரணமாக பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. ஒன் லைன் கல்வி முறையில் கற்றல்கள் இடம்பெற்றாலும் கூட அதில் பிள்ளைகளுக்கு பெருவாரியாக விரும்பம் இருக்கவில்லை. கொரோனாவுக்கு மத்தியிலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதனையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு மீண்டும் சந்தோசமாக படிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை மீண்டும் மூடாதிருக்க நாங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றோம். என தெரிவித்தனர்.
இது மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்…..
பாடசாலை மூடப்பட்டதனால் நாங்கள் மிகவும் கவலையாகவே இருந்தோம். காரணம் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம். ஆகவே பாடசாலை மூடப்பட்டதனால் எங்களின் நண்பர்களை காண முடியாது ஆசிரியர்களின் முகத்தை பார்க்க முடியாது. ஆகவே மிகவும் கவலை பட்டோம். ஒன் லைன் வகுப்புக்கள் நடந்தாலும் அதிலும் அதிகமானவர்களின் முகத்தை பார்க்க முடியாது சில நேரங்களில் கற்பிப்பதும் விளங்காது ஆகவே பாடசாலை ஆரம்பித்ததையிட்டு நாங்கள் மிகவும் மகழ்ச்சியடையகிறோம் எங்களுக்கு மீண்டும் சந்தோசமாக படிக்க முடியும் என தெரிவித்தனர்.
இது குறித்து ஆசிரியர்கள் அதிபர்கள் கருத்து தெரிவிக்கையில்….
நீண்ட இடைவெளிக்கு பின் பாடசாலை ஆரம்பித்ததையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம் என்ன தான் இருந்தாலும் பிள்னைகளின் முகங்களை பார்க்கும் போது அதை விட மகழ்ச்சி எதுவுமில்லை இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எமது பாடசாலை பொருத்தவரையில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோருமே மிகவும் ஆர்வமாக சமூகமளித்துள்ளார்கள். ஒன்றரை வருடமாக கல்வி நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் இருந்திருக்கிறார்கள். இப்போது கல்வியில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மலையகத்தினை பொருத்த வரையில் மாணவர்களின் கல்வி மிகவும் முக்கியமானது ஆகவே நாங்கள் சிறந்த முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் ஆகவே அரசாங்கம் எங்களுடைய சம்பள பிரச்சினையினை தீர்க்க வேண்டும் அப்போது மேலும் நாங்கள் மகிழ்சியாக வேலை செய்யும் நிலை உருவாகும் என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கே.சுந்தரலிங்கம், க.கிஷாந்தன், பா.பாலேந்திரன்