அக்கரபத்தனை ஆலய உடைப்பு முதலும் முடிவுமாக இருக்க வேண்டும். ஆலயங்களை உடைத்து இனங்களிடையே முறுகல் நிலையினை ஏற்படுத்த இடமளிக்க கூடாது. என மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொது செயலாளர் தேசகீர்த்தி சமூகஜோதி சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர் சர்மா கோரிக்கை விடுத்தார்
அக்கரபத்தனை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இன்று (03) திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அக்கரபத்தனை சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இன்று (03) திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள புனர்நிர்மானம் செய்யப்பட்டு வரும் சித்தி விநாயகர் ஆலயம் கடந்த 02 திகதி இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டது.
இந்த காரியத்தினை எவர் செய்திருந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது ஆகவே இந்த ஆலய உடைப்பானது முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்.
ஏன் என்றால் எமது மதத்தின் புனித சின்னங்களை உடைப்பது என்பது ஒரு மிருகத்தனமான செயல் ஆகவே இதனை செ;ய்தவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு எதிராக ஆலய நிர்வாகத்துடன் நின்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் தயங்கப் போவதில்லை.இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் எங்களது அதிர்ப்தியினையும் கண்டனத்தினையும் தெரிவிக்கும் அதே வேலை இது குறித்து பொலிஸார் மிகவும் நியாயமாக செயப்படுவதாக நாங்கள் அறிகிறோம் உயரதிகாரிகள் இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி இதனுடன் தொடர்புடையவர்களுக்கு சரியான தண்;டனையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த ஒரு குற்றவாளியும் சட்டத்திலிருந்து தப்பக்கூடாது ஏன் என்றால் இவ்வாறான சம்பவங்கள் எதிர்க்காலத்தில் இன முறுகலை ஏற்படுத்துவதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்து விடக்கூடாது என அவர் இதன் போது தெரிவித்தார்
குறித்த ஊடக சந்திப்புக்கு இலங்கை மலையக இந்து குமார் ஒன்றித்தின் தலைவர் சிவஸ்ரீ செல்வராஜ்.செல்லத்துறை சிவாச்சாரியார் உப செயலாளர் சிவஸ்ரீ விமநாத குருக்கள் இந்து மத ஆலோசகர் சிவாகம பூசணம் தற்புருச சிவாச்சாரி சிவபிரம்ம ஸ்ரீ யோகேஸ்வர்ன் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலயம் உடைப்பு தொடர்பாக அக்கரபத்தினை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை தொடர்பாக வினவினர்.
குறித்த ஆலயம் உடைப்பு தொடர்பாக மோப்ப நாய்கள் பல தடைவைகள் வர்ணமிடும் பணியில் ஈடுப்பட்டிருந்தவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றமையினால் குறித்த நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்த பின் அவர்களை எதிர்வரும் 07 திகதி வரை விளக்க மறியலில்; வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்