டயகம பிரதான பாதையினை இணைக்கும் பாதையில் அமைந்துள்ள சுமார் ஐந்து தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையின் பாலம் மற்றும் ஆலயம் என்பன கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகின இதனால் பாலம் மற்றும் குறித்த ஆற்றின் அருகாமையில் அமைந்துள்ள ஆலயமும் வெள்ளத்தால் உடைந்து போகும் அபாயம் காணப்படுவதாக ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து குறித்த பாலத்தினையும் ஆலயத்தினையும் பாதுக்காக்கும் முகமாக சுமார் 50 லட்சம் ரூபா செலவில் பாரிய மதில் ஒன்றினை அமைக்க ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் மலையக பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அமைய குறித்த பாதையினூடாக டயகம இரண்டாம் பரிவு டயகம கொலனி, டயகம மோனிங்டன், கீழ் பிரிவு மேல்பரிவு உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்களும் இப்பிரிவிலிருந்து நகர பாடசாலைக்கு வரும் மாணவர்களும் இந்த பாலத்தினூடாகவே பயணம் செய்து வந்தனர். மழை காலங்களில் வெள்ள நீர் இப்பாலத்தினையும் கோயில் பக்கத்தில் உள்ள மண் திட்டினையும் வெள்ள அரித்து செல்வதனால் பாலத்திற்கும் ஆலயத்திற்கும் சேதமேற்படும் நிலை காணப்பட்டன.
இதனால் மழை காலங்களில் மக்கள் பாரிய அச்சத்திலேயே குறித்த பாலத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குறித்த பாலத்தினை ஆலயத்தினையும் பாதுகாப்பதற்கு பாதுகாப்பு மதில் அமைத்து தருமாறு பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அரசாங்கத்திற்கு பொது மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்….
இந்த ஆலயமானது பொது மக்களின் உழைப்பினால் உருவானது ஆனால் அண்மைக்காலமாக குறித்த ஆற்றின் வெள்ளம் ஏற்படும் போது இந்த ஆலயத்திற்கு ஆபத்து ஏற்படுகின்ற நிலை ஏற்பட்டது அத்தோடு இந்த பாலமும் உடைந்து போகும் நிலை காணப்பட்டது ஆகவே நாங்கள் இது குறித்து ராஜங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து இந்த இரண்டையும் பாதுக்காக்கும் வகையில் பல லட்சம் ரூபா செலவில் மதில் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் ஆகவே அவருக்கு அரசாங்கத்திற்கும் நாங்கள் மக்கள் சார்பாக நன்றினை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப செயலாளர் சச்சிதாநந்தன் கருத்து தெரிவிக்கையில்….
டயகம இரண்டாம் பிரிவு மற்றும் டயகம மோனிங்டன் டயகம கொலனி உள்ளிட்ட பல தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பிரதான பாலமாகும் இந்த பாலமானது உடைந்து போனால் பல தோட்டங்களில் உள்ள மக்களுக்கு பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் அத்தோடு மக்களின் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தங்களது பாரிய நிதியினை செலவு செய்து கட்டப்பட்ட ஆலயமும் பாதிக்க கூடிய நிலையே காணப்பட்டன இந்த இரண்டினையும் பாதுகாத்து தருமாறு இங்குள்ள சிலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 50 லட்சம் ரூபா செலவு செய்து இந்த பாதுகாப்பு கட்டடத்தினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் இப்போது இதன் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.
அது நிறைவு பெற்ற உடன் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் மக்களுக்காக கையளிக்கப்படவுள்ளதாகவும் இது குறித்து அவருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.