இன்று முதல் ஆளுங்கட்சியின் 12 எம்.பிக்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது கொள்கையின்றி செயற்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை உரையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இன்று இந்தக் கட்சியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
டளஸ் அலகப்பெரும
டிலான் பெரேரா
நாலக கொடஹேவா
பேராசிரியர் சரித ஹேரத்
பேராசிரியர் சன்ன ஜயசுமன
கே.பி.எஸ் குமாரசிறி
குணபால ரத்னசேகர
உதயன கிரிந்திகொட
வசந்த யாப்பா பண்டார
மருத்துவர் உபுல் கலப்பத்தி
மருத்துவர் திலக் ராஜபக்ஷ
லலித் எல்லாவல