ஹட்டன் டிக்கோயா பிரதான பாதையினை இணைக்கும் எபோஸ்லி பிரதான வீதியின் அலுத்கம பகுதியிலிருந்து 4 கிலோமீற்றனர் வீதி குன்றும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்த குறித்த வீதியினை அபிவிருத்தி செய்து தருமாறு பொது மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடாக குறித்த வீதியினை காபட் இட்டு புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்துள்ளனர்.
இக்கட்டான நிலையிலும் இந்த பிரதான வீதியினை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமை குறித்து பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா பிரதான பாதையினை இணைக்கு குறித்த வீதி ஒரு பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இன்னுமொரு பகுதி மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் சொந்ததாக இருந்தன இதில் எபோஸ்லி தொடர்க்கம் பன்மூவரை கடந்த கடந்த காலங்களில் காபட் இட்டு புனரமைக்கப்பட்ட போதிலும் வீதியின் ஒரு பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன.
இதனால் பன்மூர்,எபோஸ்லி,குரங்குமலை,மொண்டிபெயார்,உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் ,பன்மூர் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் பலவித சிரமங்களை எதிர்நோக்கினர். மழை காலங்களில் குழிகளில் சேற்று நீர் நிறம்பி வழிவதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டன. இதனால் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே குறித்த வீதியினை பயன்படுத்தினர் இந்நிலையிலேயே குறித்த வீதி காபட் இட்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வீதியினை பத்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள மாகாண விதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு கட்டமாக காபட் இடப்படவுள்ள இந்த பாதைக்காக அரசாங்கம் 4 கோடிக்கும் அதிகமெனவும் இதில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் முதற் கட்டமாக காபட் இட ஆரம்பித்துள்ளதாக மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்