இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்ல்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதன்படி, நேற்றைய தினம் (26) சார்ல்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
75 வயதான சார்ல்ஸ் ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சையினை மேற்கொள்வதற்காகவே லண்டனில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சார்ல்சின் மருமகளும், இளவரசியுமான கேத் இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கேத்துக்கு சத்திரசிகிச்சை முடிவடைந்து வைத்தியசாலையிலேயே தங்கியிருக்கும் நிலையில் அவரை நேற்று (26) சார்ல்ஸ் வைத்தியசாலையில் வைத்து சந்தித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மன்னர் சார்ல்ஸ் சத்திரசிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.