மக்களுக்கு ஏற்படும் இடர்களின் போது நிவாரணங்களை மாத்திரம் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இவர்களால் இழந்தவற்றை ஈடுசெய்ய முடியாது. அவர்களின் பிரச்சினைக்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பதன் மூலமே அவர்களுக்கு முழுமையாக உதவு முடியுமென மலையக மக்கள் நிதிச்செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
டிககோயா போடைஸ் பகுதியில் கடந்த 10 ம்’ திகதி ஏற்பட்ட வெள்ளத்தில் இங்கு வாழும் சுமார் 52 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகின அவர்களுக்கு அரசி, மா, மரக்கறி உள்ளிட்ட உலர் உணவு பொருட்கள் நேற்றுமாலை (17) நிதிச்செயலாளர் புஸ்பாவிஸ்நாதன் தலைமையில் பெற்றக்கொடுக்கப்பட்டது. அதன் போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
மலையகத்தில் அண்மைக்காலமாக மண்சரிவு மற்றும் தீவிபத்து, வெள்ள போன்றவற்றின் மூலமாக அவர்கள் சிறுக சிறுக சேமித்து கட்டியெழுப்பிய வீடுகள் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அழிந்து போகின்றன. அவற்றிக்கு நிவாரணம் மாத்திரம் பெற்றுக்கொடுப்பதன் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் இன்று இந்த தோட்டத்தில் சிறிய வெள்ளம் ஏற்பட்டால் கூட இங்குள்ள 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் இதற்கு இந்த ஆற்றினை அகலப்படுத்த வேண்டும் என இந்த மக்கள் தெரிவிக்கின்றனனர். இது தொடர்பாக இங்குள்ள மக்கள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்களின் தலைவருமான வே. இராதாகிருஸ்ணன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனை தொடர்ந்து அவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்குமாறும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
அதே போன்று தான் இன்று ஆயிரம் ரூபா சம்பளம் காரணமாக பிரச்சினை காரணமாகவும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன அவர்களுக்கும் தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று மண்சாரிவாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு தோட்ட நிரவாகமோ அரசாங்கமோ எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை இதனால் இவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்